20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் முக்கிய சுற்றான சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடந்த போட்டியில் குரூப் 1 யில் இடம்பெற்றுள்ள இலங்கை ( srilanka ) மற்றும் ஆப்கனிஸ்தான் ( afganistan ) அணிகள் இன்று மோதின. கபா மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் ஆப்கனிஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரை இறுதி சுற்றுக்குள் நுழைய முடியும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற தீவிரம் காட்டும்.
ஆப்கனிஸ்தான் தொடக்க வீரர்கள் நிதானமாக விளையாடி நல்ல தொடக்கம் தந்தனர். 6 ஓவரில் 42 ரன்கள் சேர்த்த போது முதல் விக்கெட் விழுந்தது. குர்பாஸ் 28 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஓரளவுக்கு ரன் அடிக்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
ஹசரங்காவின் சிறப்பான சுழல் பந்தினால் ஆப்கனிஸ்தான் ரன் குவிப்பு தடைபட்டது, இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் ஹசரங்கா 3 விக்கெட்டை கைபற்றினார். ஆப்கனிஸ்தான் அணியில் காணி 27 ரன்னும், ஜார்டான் 22 ரன்கள் குவித்தனர்.
145 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கியது இலங்கை, அதிரடி தொடக்க வீரர் நிசங்கா 2 வது ஓவரில் 10 ரன்னில் வெளியேறினார். குஷால் மென்டிஸ் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த அசலங்கா, டி சில்வா பொறுப்புடன் விளையாடி நிலைமையை சரி செய்தனர். 19 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத் வீசிய பந்தில் அசலங்கா அவுட் ஆகினார்.
ஆனால் சிறப்பாக விளையாடிய டி சில்வா அணியை வெற்றியடைய செய்தார். 42 பந்துகளில் 68 ரன்கள் குவித்த டி சில்வா இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அரை இறுதிக்கு தகுதி பெற இலங்கை அணிக்கு மீதம் ஒரு வாய்ப்பு இருக்கிறது. வரும் போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அரை இறுதிக்கு முன்னேறும்.
தற்போது 4 புள்ளிகள் எடுத்து பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளது, ஆஸ்திரேலியா அணி 2 ஆம் இடத்திலுள்ளது. ஆஸ்திரேலிய அணி தனது கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும்.