Tamilnadu

“டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு” – ஸ்டாலின் சமூக வலைதள பதிவு!

மத்திய பாஜக அரசு மக்களவையில் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தோல்வியடைந்த நிலையில், அதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், “டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும், அதற்கு துணை நிற்கும் சக்திகளையும் ஏப்ரல் 23 அன்று ஒரே நேரத்தில் வீழ்த்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மசோதா நகலை எரிக்கும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவானது.

ஆனால், தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் மசோதாக்கள் நிறைவேறவில்லை.

இதற்கான விவாதத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

குறிப்பாக, தொகுதி மறுவரையறை காரணமாக தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பாகவே முதல்வர் ஸ்டாலின் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டு, மசோதா நகலை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் திமுக நிர்வாகிகளும் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *