இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக இரண்டு அணிகளும் நேற்று டெல்லி சென்று சேர்ந்துள்ளனர்.
முக்கியமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேக பந்து வீச்சாளர் ஸ்டார்க் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் முன்பே விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை, இதனால் அந்த அணியின் பந்து வீச்சில் தாக்கம் பெரிதாக இல்லை. தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஸ்டார்க் மைதானத்தில் பந்து வீசி பயிற்சி செய்து வருகிறார்.
பயிற்சியின் போது பேட்டியளித்த ஸ்டார்க், தனது உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், பந்து வீசுவதில் நல்ல முன்னேற்றம் வந்துள்ளதாக கூறினார். மேலும் தனது கை விரல்களுக்கு மட்டும் சற்று பயிற்சி வேண்டுமென்றும், அதனை வரும் பயிற்சி நாட்களில் பெற தகுந்த சூழல் உள்ளதாக தெரிவித்தார்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மோசமான இன்னிங்ஸ் தோல்வியை தழுவ தடுமாற்றமான பேட்டிங் மற்றும் அனுபவம் இல்லாத பந்து வீச்சாளர்களும் முக்கிய காரணிகளாக இருந்தது. தற்போது அதனை சமாளிக்கும் வகையில் டெல்லி டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டும் என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.