ஜாமின் கிடைத்த பின்னரும் சிறையில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஜாமின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிறையில் உள்ள கைதிகளின் நிலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
Also Read : அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரத்திற்கு பொறுப்பு..!!!
உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபி, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலாளர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரியான கேள்விகளை எழுப்பிய நிலையில் . ஜாமின் வழங்கப்பட்ட பின்னரும் உத்தரவாதத் தொகையை செலுத்த முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 175 கைதிகள் தற்போது வரை சிறையில் உள்ளனர் என காவல்துறை சார்பில் பதில் வழங்கப்பட்டுள்ளது.