கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் சிறையிலும் ( Namakkal collector ) அடைக்கப்படுவார்கள் என நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செப்டிக் டேங்க் மற்றும் கழிவுநீர் பாதையினுள் இறங்கி சுத்தம் செய்ய எந்தவொரு தனி நபரையும் நியமிப்பது சட்டவிரோதமானது மற்றும் தண்டணைக்குரிய குற்றமாகும் என இந்தியாவில் சட்டம் ஏற்றப்பட்டுள்ளது .
Also Read : மது போதையில் நடுரோட்டில் படுத்தவர் மீது டேங்கர் லாரி ஏறியதில் உயிரிழப்பு..!!
இருப்பினும் தமிழகம் உள்பட பல இடங்களில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தி வரும் அவலம் அரங்கேறி வருகிறது . இந்த அவலத்தை ஒழிக்க அரசு பல கடுமையான நடவடிக்கைள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கழிவுநீரை அகற்ற, சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
கல்வி, வணிக நிறுவனங்கள், ஆலைகளில் கழிவுநீரை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் 2 ஆண்டு சிறை, ( Namakkal collector ) ரூ. 2லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.