தீபாவளி பண்டிகையை காரணமாக வைத்து ஆம்னி பேருந்துகளில் அதிகம் கட்டணம் பெறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது :
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Also Read : நோயல் டாடாவால் டாடா சன்ஸ் தலைவராக முடியாதாம் – வெளியான ஷாக்கிங் தகவல்..!!
ஆம்னி பேருந்துகளில் அதிகம் கட்டண வசூலிப்பதாக பெறப்படும் புகார்களையடுத்து, அரசு சார்பில் Toll Free எண் வெளியிடப்பட்டுள்ளது;
தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு ஏதேனும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டண வசூலிப்பதாக எங்களுக்கு புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நிச்சயம் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்;
பயணத்தை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளுக்கு எந்தவித போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.