திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக விடுதி அறையில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கதிரேசன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள பிரபல கல்லுரியான தேசிய தொழில்நுட்ப கழக விடுதி அறையில் தனியாக இருந்த மாணவிக்கு ஒப்பந்த ஊழியர் கதிரேசன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில் ஒப்பந்த ஊழியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
Also Read : மதுரை மற்றும் கோவையில் பல கோடி முதலீட்டில் ஏராளமான வேலைவாய்ப்பு..!!
தேசிய தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு, விடிய விடிய மாணவர்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் .
புகார் அளித்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாணவிகளின் ஆடை குறித்து விமர்சனம் செய்த விடுதி காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.