உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இன்றைய லீக் போட்டியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில்லுக்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 05ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது .
இந்நிலையில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள லீக் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் ஒன்றுக்கொன்று மல்லுக்கட்ட உள்ளது.
இந்த உலகலக்கோப்பை தொடரில் இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் விளையாடவுள்ளதால், தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் இன்னும் பூரண நலம் பெறாததால் அவருக்கு இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .
சுப்மன் கில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் உடல்நிலையில் குறித்து இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்தியாவின் இளம் பேட்டிங் திறமையான கில் இன்றைய போட்டியில் இல்லாதது அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.