சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் 2வது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் (வயது 59) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர்.
9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தி திட்டமிட்டபடி இவர்கள் கடந்த ஜூன் 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டிய நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் தற்போது வரை விண்வெளியில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது .
இதுமட்டுமின்றி இந்த இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் தனது 59 ஆவது பிறந்தநாளை விண்வெளியில் கொண்டாடி உள்ளார்.இதற்குமுன் 2012ம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் தனது பிறந்தநாளை விண்வெளியில் கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது .