ஆய்வுப்பணிக்காக சர்வேதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற நாசாவின் நட்சத்திர விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக விண்வெளி வீரர் ஆகிய இருவரின் தற்போதைய நிலை குறித்து நாசா புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்றனர்.
Also Read : ஆதார் பான் இணைக்க கடைசி நாள் – புதிய கெடுவை விதித்த மத்திய அரசு..!!
7 நாட்களில் பணியை முடித்து மீண்டும் பூமிக்கு திரும்பிருக்க வேண்டிய இருவரும் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இதனால், இருவரும் 2025ம் ஆண்டு பிப் மாதம் தான் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக விண்வெளி மையத்தில் இருக்கும் அவர்களின் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும், மன அழுத்தத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது இந்த தகவல் பொய் என்றும் அவர்கள் இருவரும் நலமாக இருப்பதாகவும் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.