நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டப்பட உள்ள நிலையில் நாசாவின் பிரபல விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தபடி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.
9 நாட்களில் கொடுத்த வேலையை முடித்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று வரை பூமிக்கு திரும்ப முடியாமல் விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அணிமையில் அறிவித்திருந்தது .
Also Read : சென்னை மெட்ரோ ரயிலில் இளம்பெண்ணை ரகசியமாக புகைப்படம் எடுத்த நபர் கைது..!!
இதையடுத்து சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இருவரும் தங்களது பணியை தொடர்ந்து வரும் நிலையில் நாசா அவர்களுடன் தொடர்பில் இருந்து வருவவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை மறுநாள் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டப்பட உள்ள நிலையில் நாசாவின் பிரபல விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தபடி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துகள்; பூமியில் இருந்து 260 மைல்களுக்கு அப்பால் தீபாவளியை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.