சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தற்போது தனது குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ள புகைப்படம் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.
பெங்களூரில் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி பிறந்த சிவாஜி ராவ் கெய்க்வாட் தான் இன்று நாம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடி வரும் ரஜினிகாந்த் . பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்த இவர் அங்கேயே பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.
பின்னர் நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்த இவர் பால சந்தர் கண்ணில் பட அன்று ஆரம்பித்த அந்த கலைப்பயணம் இன்று வெற்றி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.இளம் வயதில் எத்தனையோ சவால்களை சமாளித்து இன்று வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73 ஆவது பிறந்தநாள்.
தலைவரின் பிறந்தநாளுக்கு திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் தற்போது தனது குடும்பத்துடன் குதூகலமாக தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
மனைவி லதா ரஜினிகாந்த் , மகள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் சுற்றி நிற்க கேக் வெட்டி கொண்டாடி உள்ள ரஜினிகாந்தின் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.