கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான இன்று திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர் . திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் குடும்பத்துடன் கடலில் நீராடி மகிழ்வதை வழக்கமாக வைத்துள்ளனர் .
தைப்பூசம் , கந்த சஷ்டி போன்ற விழாக்கள் இங்கு வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம் அந்தவகையில் கடந்த நவம்பர் 2ம் தேதி கந்த சஷ்டி விழா திருச்செந்தூரில் கோலாகலமாக தொடங்கியது.
Also Read : டேட்டிங் நபரால் நேர்ந்த சோகம் – 34 வயது பெண் போலீசில் புகார்..!!
இந்நிலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நாளான இன்று சூரசம்கார நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் சிங்க முகம் கொண்ட அசுரனையும், அதை தொடர்ந்து யானை முகம், அசுர முகம், சேவல் என அனைத்தையும் முருகர் வதம் செய்தார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் சிறப்பாக நடைபெற்ற இந்த சூரசம்ஹார விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றார்.