சூரசம்ஹாரம் நிகழ்வை முன்னிட்டு திருச்செந்தூரில் நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர் . திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் குடும்பத்துடன் கடலில் நீராடி மகிழ்வதை வழக்கமாக வைத்துள்ளனர் .
தைப்பூசம் , கந்த சஷ்டி போன்ற விழாக்கள் இங்கு வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம் அந்தவகையில் கடந்த 2ம் தேதி கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக தொடங்கியது . இதன் காரணமாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Also Read : சிறுவனின் உயிரைப் பறித்த சாக்லேட் – உத்தரப்பிரதேசத்தில் நடந்த பகீர் சம்பவம்..!!
இந்நிலையில் சூரசம்ஹாரம் நிகழ்வை முன்னிட்டு திருச்செந்தூரில் நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு நவம்பர் 7, 8ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து குமரி செல்லும் வாகனங்கள் காந்திபுரம், காயாமொழி வழியாக செல்ல வேண்டும் எனவும் நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் ஆறுமுகநேரி DCW ஜங்ஷன் வழியாக செல்லவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.