விஜயகாந்த் நினைவிடத்தில் (Vijayakanth Memorial) நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் மறைந்த சம்பவம் அவரின் கட்சி தொண்டர்களையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
கடந்த பல வருடங்களாகவே உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த அவர், மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு பின்னர் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கட்சிதொண்டர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் மறைவின் போது வெளிநாட்டில் இருந்ததால் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று தகவல் வெளியானது.
இதனால் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியதும், நேற்று காலை சிவக்குமார், கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
காதலே நிம்மதி, சந்திப்போமா, நேருக்கு நேர் ஆகிய படங்களில் நடித்த சூர்யாவுக்கு 1999ஆம் ஆண்டு விஜயகாந்த்துடன் இணைந்து நடித்த பெரியண்ணா திரைப்படம், ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
அதன் பின் தான், சூர்யாவுக்கு பூவெல்லாம் கேட்டுப்பார், நாந்தா உள்ளிட்ட திரைப்படங்கள் கிடைத்தது.
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த சூர்யா நேரில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் அவர் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில்(Vijayakanth Memorial) நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சூர்யா, அண்ணனின் பிரிவு ரொம்ப துயரமானது.
பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். எப்போதும் அவரின் நினைவு இருக்கும்.
நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு, எனக்கு சம்மதமே. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. இவ்வாறு கூறினார்.
அதே போல் நடிகர் அருண் விஜய் நேற்று மாலை மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/senthil-balaji-case-hearing-today/
அப்போது பேசிய அவர், “கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு சிகிச்சையில் இருந்தேன். விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.
அவர் செய்த நல்ல விஷயங்களை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என நினைப்பார். அதனால் இனி வரும் காலங்களில், என்னுடைய படப்பிடிப்பு தளத்தில் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன்.
நடிகர் சங்க வளாகத்தை திருப்பி மீட்டு கொடுத்தவர் விஜயகாந்த். அதன் ஒரு அங்கத்திலாவது அவருடைய பெயர் இருக்க வேண்டும் என்பது கோரிக்கை” என்றார்.