தைவான் தலைநகர் தைபேவில் இன்று காலை 8 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் (taiwan) இது 7.2ஆக தைவானின் பூகம்ப கண்காணிப்பு நிறுவனத்தில் பதிவாகி உள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் 7.5 ரிக்டர் என்று தெரிவித்துள்ளது. பூமிக்கு கீழே சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நில நடுக்கம் காரணமாக, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். பல்வேறு கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், பலரும் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கம் காரணமாக நகரின் பல இடங்களிலும் மின்சாரம் சுண்டிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை சேவையும், தீவு முழுவதும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.”25 ஆண்டுகளில் இல்லாத வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக” என்று தைபே நில அதிர்வு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Also Read : https://itamiltv.com/nirmala-sitharaman-spoke-about-kachatheevu-case/
மேலும் நிலநடுக்கத்தை அடுத்து தைவான்,பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 9.8அடி , அதாவது 3மீட்டர் உயரத்திற்கு கடலில் சுனாமி அலைகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை காரணமாக ஜப்பானின் ஒகினாவாவின் தெற்கு மாகாணத்தில் கடலோரம் அருகே வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு யோனகுனி தீவின் கடற்கரையில் 1 அடி அளவுக்கு (taiwan) அலைகள் எழுந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மியாகோ மற்றும் யாயாமா தீவுகளையும், அலைகள் தாக்கக்கூடும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.