பள்ளி மாணவர்களுக்கு, தமிழ் கையெழுத்துப் போட்டி நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமீப காலமாக தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் மாணவர்களின் கல்வி மற்றும் அவர்களின் திறமைகள் மேம்படச்செய்யும் வகையில் பல்வேறு செயல்திட்டங்கள் அரசு சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு, தமிழ் கையெழுத்துப் போட்டி நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Also Read : இடிந்து விழுந்த அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடம் – சீமான் கண்டனம்..!!
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழியை அழகாக எழுதும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், ஜூலை 31ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் போட்டிகளை நடத்தி முடிக்க, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது .
இந்த போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.