தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மொத்தம் 9.10 லட்சம் மாணவ, ( 10th result ) மாணவிகள் எழுதிய இத்தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55% என தேர்வுத்துறை அறிவித்துள்ளது,
தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்ற இந்த பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது .
இந்நிலையில் தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகி உள்ளது.
Also Read : கே.எல் ராகுலை கதறவிட லக்னோ அணியின் உரிமையாளர் – கரணம் என்ன தெரியுமா..?
மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்;
EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய இத்தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55% என தேர்வுத்துறை அறிவித்துள்ளது,
இதுமட்டுமின்றி இந்த முறையும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே ( 10th result ) அதிகம் (5.95%) தேர்ச்சி பெற்றுள்ளனர் .
தேர்ச்சி பெற்றவர்கள் – 8,18,743 (91.55%)
மாணவியர் – 4,22,591 (94.53 %) தேர்ச்சி
மாணவர்கள் – 3,96,152 (88.58%) தேர்ச்சி
இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 5.95 % அதிகம் தேர்ச்சி