தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை (budget) நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க : Headlines : இன்றைய தலைப்புச் செய்திகள்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 4-ஆவது மற்றும் நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
https://x.com/ITamilTVNews/status/1759440605598630150?s=20
பட்ஜெட் (budget) குறித்த விபரம்!
- காலை உணவு திட்டம் 2023-24 ஆண்டு திட்டத்தில் 7,000 கோடி ஒதுக்கீடு செய்திருந்ததாக தங்கம் தென்னரசு பெருமிதம்.
- உலக மொழிகளில் மொழி பெயர்த்த தலைசிறந்த நூல்களை முன்னணி கல்வி நிலையங்களில் இடம்பெற செய்ய 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் 5 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- மொழித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதியுதவி.
- கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு; அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரிட் வீடுகள் கட்ட ஒரு வீட்டிற்கு ரூ.3.5 இலட்சம் வழங்கப்படும்.
- முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. - வடசென்னையில் கழிவுநீர் அகற்றம் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.946 செலவில் புதிய திட்டம்.
- தமிழ் இணைய வழி மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
- 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு.
- பெண்களின் வளர்ச்சிக்காக தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் கலைஞர் உரிமைத்தொகைக்கு இந்த ஆண்டு ரூ.13,720 ஒதுக்கீடு.
- வடசென்னையில் புதிய குடியிருப்புகள், தொழிற்பயிற்சி மையங்கள், திறன்மிகு பள்ளிகள், மருத்துவமனைகள், ஏரிகள் சீரமைப்பு உள்ளிட்டவைகள் அமைக்க ரு.1000 கோடி ஒதுக்கீடு.
- மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கு ரூ.3,050 கோடி நிதி ஒதுக்கீடு.
- புதுமைப் பெண் திட்டம் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
- மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து கல்வி உதவி செலவுகளையும் அரசே ஏற்கும்.
- 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க ரூ.35,000 கோடி ஒதுக்கீடு.
கோவையில் ரூ.1100 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு; ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
- கீழடியில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும்.
- மகளிர் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களிலும், ரூ.26 கோடி மதிப்பீட்டில் மூன்று தோழி விடுதிகள் கட்டப்படும்.
- தஞ்சாவூர், சேலம், திருப்பூர்,வேலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் NEO டைட்டில் பார்க் அமைக்கப்படும்.
- சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு.
- தஞ்சாவூரில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
- ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயிலுக்கு திருக்குடமுழுக்கு செய்வதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- 1.சிங்காரச் சென்னை 2.O திட்டத்திற்கு ரூ.500 கோடி.
- 2.சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு.
- 3.சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
- 4.வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
- 5.பெசன்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.