தமிழகத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது . மக்கள் சிந்திக்கவில்லை என்றால் (Krishnagiri) தமிழகத்தை காப்பாற்ற முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு கூடி இருந்த திரளான மக்கள் முன் எழுச்சி உரையாற்றினார்.
கச்சத்தீவு பற்றிப் பேச பா.ஜ.,வுக்கோ, அண்ணாமலைக்கோ என்ன தகுதி இருக்கிறது? கச்சத்தீவை மீட்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சி எடுத்தார்; வழக்கும் தொடர்ந்தார்.
ஜெயலலிதா கோரிக்கை வைத்தபோது செவி சாய்க்காதவர்கள், இப்போது கச்சத்தீவு குறித்து பேசுகின்றனர்.
அரசியல் ஆதாயத்துக்காக ஓட்டுக்களை பெற கச்சத்தீவு பற்றி பேசுகின்றனர்.
கஞ்சா விற்பதில், போதைப்பொருள் விற்பதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது.மக்கள் சிந்திக்கவில்லை என்றால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது .
Also Read : https://itamiltv.com/lok-sabha-election-procedure-dmk-case-in-madras-high-court/
நீட் தேர்வை அதிமுக தான் தடுத்து நிறுத்த முயற்சி செய்தது. நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக – காங்கிரஸ் தான்
போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் காட்சியளிக்கிறது. நாட்டிலேயே கடன் வாங்குவதில் (Krishnagiri) முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளதுஎன அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.