தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில், காலியாக உள்ள 13,020 பணியிடங்களுக்கான (teaching posts) வேலைவாய்ப்பு அறிவிப்பினை மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தக்னிகி ஷிக்சா விதான் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் மட்டும் 4,188 பணியிடங்கள் (teaching posts) நிரப்பப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சாராத பணிகள் என இரண்டு பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்றும், இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யோகா, கலை, இந்தி, நூலகர், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தெலுங்கு, ஆங்கிலம், இசை உள்ளிட்ட துறைகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், பத்து, பன்னிரெண்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும், மொழிப் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் மொழி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு, கம்யூட்டர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு, பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க பி.எட். அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எட். முடித்திருந்தால் கூடுதல் சிறப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்னப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், https://www.tsvc.in/application.php – என்ற இணைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.500 விண்ணப்பிக்க கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பிக கடைசி தேதி: 25.02.2023 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிட விவரம் – ஊதிய விவரம்:
- யோகா ஆசிரியர்- 349 : ஊதியம் – ரூ.32,000
- கலை ஆசிரியர்- 349 : ஊதியம் – ரூ.32,000
- இசை ஆசிரியர்- 349 : ஊதியம் – ரூ.32,000
- இந்தி ஆசிரியர்- 349 : ஊதியம் – ரூ.35,000
- தெலுங்குஆசிரியர்-349 : ஊதியம் – ரூ.35,000
- ஆங்கிலம் – 349 : ஊதியம் – ரூ.35,000
- கணக்கு ஆசிரியர்- 349 : ஊதியம் – ரூ.35,000
- பொது அறிவியல் ஆசிரியர்-349 : ஊதியம் – ரூ.35,000
- சமூக அறிவியல் ஆசிரியர்- 349 : ஊதியம் – ரூ.35,000
- நூலகர்- 349 : ஊதியம் – ரூ.30,000
- தொழில்நுட்ப உதவியாளார்- 349 : ஊதியம் – ரூ.30,000
- அலுவலக உதவியாளார்- 349 : ஊதியம் – ரூ.20,000