தமிழகத்தில், 5000 பயனாளிகளுக்கு மேல், புகைப்படங்களை நமோ செயலியில் பதிவேற்றம் செய்த பாஜக மகளிரணியினரைச் சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்ளையும் தெரிவித்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
நாடு முழுவதும் மாநிலங்களிடையே, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளைக் கண்டறிந்து, அவர்கள் புகைப்படங்களை நமோ செயலியில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வில், தமிழகம் இந்திய அளவில், மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில், 5000 பயனாளிகளுக்கு மேல், புகைப்படங்களை நமோ செயலியில் பதிவேற்றம் செய்த பாஜக மகளிரணியினரைச் சந்தித்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொண்டேன். தமிழக அளவில், ஐந்தாயிரம் பயனாளிகளுக்கு மேல் கண்டறிந்து, அவர்கள் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்த பாஜக சகோதர சகோதரிகள் 13 பேரில், 11 பேர், கோவை பெருங்கோட்ட மகளிரணியினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை இன்று சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
இந்த நிகழ்வினை அகில இந்திய அளவில் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி வரும் @BJPMahilaMorcha தேசியத் தலைவி திருமதி வானதி சீனிவாசன் அக்கா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்திலிருந்து பெருவாரியான வெற்றியாளர்களைப் பெற்றுத்தந்த கோவை பெருங்கோட்டப் பொறுப்பாளர் திரு முருகானந்தம் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார் .