தமிழகத்தில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டு நிறைவடைந்து விட்டது. மொத்தம் 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கியது.
இதில் சுமார் 9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இதனத் தொடர்ந்து 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 20 ஆம் தேதி ஒரே நாளில் வெளியிடப்பட்டது. 12-ம் வகுப்புக்கு காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்புக்கு மதியம் 12 மணிக்கும் முடிவுகள் வெளியாகியது.
இந்த நிலையில் தமிழகத்தில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
11-ம் வகுப்பு பொதுத் தேர்வு 3119 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை, 8,83,882 பேர் எழுதினர். இதில், மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேரும் பொதுத் தேர்வு எழுதினர். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜூலை 7ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே வெளியீடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவுகளை dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.