சென்னையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வரை மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் வடக்கு அந்தமான், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளி மண்டல சுழற்சி இன்று உருவாகிறது என்றும், அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் இது தமிழக அரசு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ள இந்திய வானிலை மையம், வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது என்றும் கூறி உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வரை மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ள தமிழ்நாடு வெதர்மேன், நேற்றைய தினம் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தென்மேற்கு பருவகாற்று வரலாற்றில் அதிக மழை நேற்று பெய்துள்ளது.
இந்த மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை மழை பெய்யும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.