அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 17 வயது வீராங்கணை பதக்கங்கள் வென்று அபார சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை காசிமா பங்கேற்று 3 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான காசிமா தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என 3 பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
Also Read : நடிகை கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!
சிறு வயது முதலே கேரம் விளையாட்டில் சிறந்து விளங்கிய கடந்த காசிமாவுக்கு கடந்த ஜூலை மாதம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசிமாவின் அமெரிக்க பயணத்திற்கு 1.50 லட்சம் வழங்கி வாழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் கடல் கடந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தமிழ்நாட்டின் பெருமையை திறம் பட விளையாடி காட்டியுள்ள காசிமாவுக்கு தற்போது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்