உலகிலேயே அதிக பற்களை கொண்ட பெண் என்ற புதிய சாதனையை தஞ்சையை கல்பனா பாலன் என்ற இளம் பெண் படைத்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதித்தராக பிறந்த அனைவருக்கும் பொதுவாக 32 பற்கள் இருக்கும், வெகு சிலருக்கே அதனை விட குறைவாக இருக்கும் என்பதை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இங்கோ உலககிலேயே அதிக பற்கள் கொண்ட பெண் என்ற சாதனையை ஒருவர் படைத்திருக்கிறார்
கனடாவைச் சேர்ந்த இவானோ மெலோன் என்பவர் 41 பற்களை கொண்டு, அதிக பற்கள் கொண்ட நபர் என்ற சாதனையை பெற்றுள்ளார். ஹைபர்டோன்ஷியா என்ற மருத்துவ நிலையின் காரணமாகவே அவருக்கு அதிக பற்கள் வளர்வதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கல்பனா பாலன் எனும் 26 வயதுக்கு பெண்ணுக்கு 38 பற்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக அவரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
கல்பனா பாலனுக்கு இயக்கற்கையாகவே சற்று அதிகமான மேல் தாடையும் கீழ் தாடையும் இருப்பதே அவரின் பற்கள் அதிகமாக இருப்பதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.