திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் டாஸ்மாக் (Tasmac) கடைகளை மூட உத்தரவிட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 5,329 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளை தமிழக அரசு மூடியது.
இந்த நிலையில், தற்போது 4,829 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்படுகிறது. இந்த கடைகளுக்கு தேவையான மதுபான வகைகளை 3 வித ஆலைகள் உற்பத்தி செய்கின்றன.
குறிப்பாக, இந்திய தயாரிப்பில் அயல்நாட்டு மதுபானங்களான பிராந்தி, விஸ்கி, ஓட்கா, ரம், ஜின் போன்றவற்றை மதுபான உற்பத்தி செய்யும் 12 ஆலைகள் உற்பத்தி செய்கிறது.
அதேபோல், பீர் வகைகளை 7 ஆலைகளும், ஒயின் வகைகளை 3 ஆலைகளும் உற்பத்தி செய்கின்றன.
இந்த டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வியாபாரம் களைகட்டும். அந்த வகையில், இந்த வருடமும் டாஸ்மாக் (Tasmac) கடைகளின் பொங்கல் வருமானம் கோடிகளைத் தாண்டியது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/marigold-price-fall-due-to-increased-yield-on-hosur-farmers-disappointed-on-pongal-sales/
அதே போல் வடலூர் ராமலிங்கர் நினைவு நாளான ஜனவரி 25ம் தேதியும், அதற்கடுத்த நாள் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் ஓட்டல், கிளப் பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.
https://x.com/ITamilTVNews/status/1747199853401436475?s=20
மேலும், உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டிருந்ததால், பல ஊர்களிலும் டாஸ்மாக் கடைகளில் நேற்றே “மதுப் பிரியர்கள்” மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.