கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 18ம் தேதி வல்வில் ஓரி விழா கொண்டாப்பட்டு வருகிறது. அரசு விழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில், கொல்லிமலையில் உள்ள செம்மேடு, செங்கரை மற்றும் சோளக்காடு ஆகிய பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மதுக்கடைகளை திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்வது தெரிய வந்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக கடந்த 21ஆம் தேதி அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொல்லிமலை வல்வில் ஓரி விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து, குறித்து ஆலோசிக்கப்பட்டது