தமிழ்நாட்டில் ₹9,000 கோடி முதலீட்டில் வாகன உற்பத்தி ஆலையை (mkstalin) தொடங்குவதற்காக டாடா மோட்டார்ஸ் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் வருங்கால சந்ததிகளுக்காக பல்வேறு திட்டங்களும் தொழிற் பூங்காக்களும் பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ளது.
இதுமட்டுமல்லாமல் பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றனர்.
Also Read :https://itamiltv.com/edappadi-palaniswami-angry-with-kacm/
அந்தவகையில் தற்போது தமிழ்நாட்டில் சுமார் 9,000 கோடி முதலீட்டில் வாகன உற்பத்தி ஆலையை தொடங்குவதற்காக டாடா மோட்டார்ஸ் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார் .
இதன் மூலம் 5,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். (mkstalin) 2 மாதங்களில் இரு பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.