பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், பள்ளி ஆசிரியர் உள்பட இருவர் (teacher) போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அபிமணி (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இது குறித்து உடற்கல்வி ஆசிரியரான ஹெரால்டு சகாயராஜ் (52) என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை சாக்காக வைத்த ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ், அந்த மாணவியை விசாரிப்பது போல் தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவரை பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் உற்சாகமிழந்து காணப்பட்ட சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஆசிரியர் குறித்து புகார் அளித்துள்ளனர். ஆனால்,பள்ளி தலைமை ஆசிரியரோ இது குறித்து விசாரிக்காமல் தாமதப்படுத்தியதால், அதிருப்தி அடைந்த சிறுமியின் பெற்றோ, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பு எண் 1098 எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.
Also Read : https://itamiltv.com/publication-of-guidelines-for-school-vehicles/
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து சிறுமி கூறியதை வைத்து, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் அபிமணி மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
12வயது சிறுமியை பள்ளி ஆசிரியரும், இளைஞரும் பாலியல் வன்கொடுமை (teacher) செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.