சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழில் பேசியதால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை 5ம் வகுப்பு மாணவனின் காதை பிடித்து திருகியதில் (teacher attack) காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை, ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள் 5ம் வகுப்பு மாணவன் தமிழில் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : special trains : நாளை கோவை – சென்னை இடையே இயக்கம்
இதனை கவனித்த ஆசிரியை நாயகி, அந்த மாணவனின் காதை பிடித்துத் திருகி உள்ளார். இதில் மாணவனின் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவனின் பெற்றோர் 5 ஆம் வகுப்பு மாணவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
மாணவனின் காது சதை கிழிந்ததால் ஆசிரியர் மீது கடும் கோபத்தில் இருந்த மாணவரின் பெற்றோர் பள்ளிக்கு சென்று ஆசிரியையையும் தாக்கி உள்ளனர்.
இதனை அடுத்து, உடனடியாக விரைந்து வந்த ராயபுரம் போலீசார், சம்பவம் குறித்த விசாரித்தனர்.
https://x.com/ITamilTVNews/status/1750834489868386704?s=20
விசாரணைக்கு பின்னர் மாணவரின் காதை பிடித்து திருக்கி காயப்படுத்திய (teacher attack) ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஆசிரியை நாயகியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்க : Karur: பாதி எரிந்த நிலையில் மாணவியின் உடல்!-கரூரில் பரபரப்பு!
தமிழில் பேசியதால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை காதை பிடித்து திருகி மாணவனை படுகாயப்படுத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்களை அடிக்கக்கூடாது என்பது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உத்தரவாக உள்ளது.
இருந்த போதிலும் குறுப்பு செய்தாலோ, அல்லது வீட்டுப்பாடம் செய்யாமல் வந்தாலோ மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்கவும் செய்கிறார்கள்.
அது மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக தான் என்றாலும் சில ஆசிரியர்கள் கடுமையாக மாணவர்களை தாக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கத் தான் செய்கிறது.
இது போல் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்ளும் ஆசியர்களால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது.