20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் முக்கிய சுற்றான சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா(india) ஜிம்பாப்வே (zimbabwe)அணிகள் மோதின. உலகக்கோப்பை தொடரில் நடைபெறும் கடைசி சூப்பர் 12 போட்டி இதுவாகும்.
ஏற்கனவே இந்திய அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால் புள்ளி பட்டியலில் 2 ஆம் இடத்திற்கு செல்லும். நேற்று நடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய அணி 186 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுல் 50 ரன்களும், அதிரடி வீரர் சூர்ய குமார் 25 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அணிக்கு பலமான ஸ்கோர் அமைத்தனர்.
இந்திய பந்து வீச்சை ஏதிர்கொண்ட ஜிம்பாப்வே அணி 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்தது. ஏற்கனவே இந்த பிரிவிலிருந்து முதல் அணியாக அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது மேலும் வியாழன்கிழமை நடக்கும் 2 வது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியைக் எதிர்கொள்கிறது.
இதற்கு முன்னதாக புதன்கிழமை நடக்கும் முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் பலபரீட்சை செய்கின்றன. 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடர் போலவே இந்த உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி அரை இறுதி சென்றுள்ளது. இதனால் மீண்டும் இந்திய அணி உலக்கோப்பையை கைபற்றுமென்றும் ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். இந்த தொடரில் பலம் வாய்ந்த அணியாக இங்கிலாந்து இருந்து வருகிறது. வரும் அரை இறுதியில் இங்கிலாந்தை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா என்று இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிரபார்க்கின்றனர்.