இஸ்ரேல் – பாலஸ்தீன் போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு WTA FINALS டென்னிஸ் தொடரில் தனக்கு கிடைக்கும் பரிசுத் தொகையில் ஒரு பகுதியை நன்கொடையாக அளிப்பதாக ஓன்ஸ் ஜாபூர் அறிவித்துள்ளார்.
WTA FINALS டென்னிஸ் தொடரில் டுனீசியா நாட்டை சேர்ந்த ஓன்ஸ் ஜாபூர் மற்றும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த வாண்ட்ரொசோவாவுகும் இடையிலான போட்டியில் அபாரமாக ஆடிய ஓன்ஸ் ஜாபூர் வாண்ட்ரொசோவாவை வீழ்த்தி வெற்றியை ருசித்தார்.
போட்டிக்கு பின் பேசிய டுனீசியா வீராங்கனை ஓன்ஸ் ஜாபூர் கூறியதாவது :
போட்டியில் வென்றது மகிழ்ச்சி. ஆனால் சமீப காலமாக என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. இஸ்ரேல் – பாலஸ்தீன் போரில் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் இறப்பதை பார்க்கும்போது நெஞ்சம் உடைகிறது. இது அரசியல் சார்ந்த கருத்து கிடையாது. மனிதாபிமானம் மட்டுமே
WTA FINALS டென்னிஸ் தொடரில் தனக்கு கிடைக்கும் பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக அளிக்கிறேன் என ஓன்ஸ் ஜாபூர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்