மும்பையில் உள்ள கார் ஷோரூமில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள போவாய் பகுதியில் சகி விஹார் சாலையில் உள்ள சாய் ஆட்டோ ஹுண்டாய் ஷோரூம் கராஜில் இன்று காலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நான்கிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க நீண்ட நேரமாக போராடி வருவதாக தீயணைப்பு அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
இந்த தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்றும் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.