தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் காம்போவில் மிக பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் வசூல் சாதனை படைத்தது வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் சேர்ந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.
இந்நிலையில் லியோ திரைப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . தமிழ் சினிமாவில் ப்ரீ புக்கிங்கில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படமாக லியோ மாறியுள்ளதாக கூறப்படுகிறது .
புக்கிங்கில் மட்டுமே இவ்ளோ கோடிகளை வசூல் செய்த் இப்படம் ரிலீசுக்கு பின் இன்னும் எவ்வளவு கோடிகளை அள்ளப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.