உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக (thanjai) தொடங்கி நடைபெற்று வருகிறது.
தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம், இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது .
Also Read : https://itamiltv.com/vadivelu-created-awareness-through-song-after-voting/
இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பக்தர்கள் வெள்ளத்தில் தஞ்சை பெரிய கோயில் தேர் ஆடி அசைந்து வருவதை பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது .
சிவ வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் கோஷம் விண்ணைப் பிளக்க தஞ்சையில் உள்ள முக்கிய வீதிகளில் இந்த தேரோட்டம் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.