சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘அயலான்’ படத்தின் Second Single பாடல் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் அயலான் . 2024 பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.