விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 ல் போட்டியாளர்களின் புகாரால் வெளியேற்றப்பட்டுள்ள பிரதீப் ஆன்டனி போட்டுள்ள முதல் பதிவு தற்போது செம வைரல் ஆகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கடந்த 6 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் அண்மையில் தொடங்கி தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது .
இந்நிலையில் மக்களின் மனம் கவர்ந்த சீசனாக மாறிருக்கும் இந்த 7வது சீசனில் இருந்து அதி பயங்கரமாக ஆடி வந்த பிரதீப் சில பல காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிரதீப் மீது போட்டியாளர்கள் பலர் அவருடன் இருக்க பயமாக இருக்கிறது . பெண்கள் வீட்டில் இருக்க அஞ்சுகிறார்கள் , கழிவரையரின் கதவை மூடாமல் உபயோகப்படுத்துகிறார் கெட்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்திக்கிறார் என பல விதமான குற்றச்சாட்டுகளை கமல்ஹாசன் முன் வைத்தனர் .
இதனை ஒன்றுக்கு பலமுறை விசாரித்த கமலஹாசன் இறுதியில் ஒரேமுடிவாக பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினார்.
பிரதீப்பின் இந்த எலிமினேஷனுக்கு பலர் ஆதரவு தெரிவித்தும் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிரதீப் தனது முதல் பதிவை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த பதிவை நீங்களே பாருங்கள்..