ஆந்திராவில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் விபத்துக்குள்ளானதில், அடிபம்பின் கைப்பிடி அவரது வயிற்றை துளைத்துச் (pierced stomach) சென்ற நிலையில், கட்டிங் மெஷின் மூலம் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில், பிரகாசம் மாவட்டத்தில் நாகராஜ் என்பவர் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த அடி பம்பு மீது அவரது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அடிபம்பின் கைப்பிடி நாகராஜின் வயிற்றை துளைத்துக் கொண்டு (pierced stomach) உள்ளே சென்று விட்டது.
இந்நிலையில், வலியால் துடித்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகிலிருந்த தனியார் மருத்துமவனைக்கு அனுப்பிவைத்தனர்.
அவருக்கு, கட்டிங் மெஷின் மூலம் பம்பு கைப்பிடி வெட்டி எடுக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில், அறுவை சிகிச்சையின் மூலம் அவரது வயிற்றில் சிக்கிக்கொண்டிருந்த கைப்பிடியின் துருப்பிடித்த பாகங்கள் மற்றும் உலர்ந்த பெயிண்ட் ஆகியவற்றை மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.