இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி டெஸ்ட் தொடரை பறிகொடுத்ததுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 3 நாள் ஆட்டம் மீதமிருந்த நிலையில், நிதானமாக ஆடாமல் அணைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி வீரர்கள் பறிகொடுத்ததால் நியூசிலாந்து அணி நிணயித்த 146 ரன்களை எட்ட முடியாமல் 25 ரன்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இந்தியாவின் வெற்றிக்காக தனி ஒருவராக போராடிய ரிஷப் பண்ட் 64 ரன்களில் அவுட் ஆனார்.
Also Read : சீமானின் பேச்சை மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை – சம்பத்குமார்
இந்நிலையில் தோல்வி குறித்து வேதனை தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது :
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தவறான வியூகங்களை வகுத்து விட்டோம். நான் சிறந்த கேப்டனாக செயல்படவில்லை. தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்.
டெஸ்ட் தொடரில் தோற்பதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. நிறைய தவறு செய்துள்ளோம் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். என் மனதில் நிறைய திட்டங்கள் இருந்தன. ஆனால் எதுவும் எடுபடவில்லை. அது ஏமாற்றமாக உள்ளது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.