கல்பாக்கம் அருகே மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பம்மராஜபுரம் பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 70). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் இட்லிக்கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெவேறு இடத்தில் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
Also Read : ரோமானியாவில் பொக்கிஷமாக மாறிய பழைய கல்..!!
இந்நிலையில் இரவு 8 மணிவரை வீட்டில் விளக்கு போடாமல் கதவு வெளியே தாப்பாள் போடப்பட்டு இருந்ததை கண்டு அருகில் இருந்தவர் கன்னியம்மாள் வீட்டை திறந்து பார்த்தபோது கழுத்து அறுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கன்னியம்மாள் சடலமாக கிடந்துள்ளார் .
இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கன்னியம்மாளின் சடலத்தை மீது பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் கொலைக்கான காரணத்தையும் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.