குமரி மாவட்டத்தில், நடைபெற்ற திருவிழா ஒன்றில் நடைபெற்ற ஊர்வலத்தின் மேளதாளத்திற்கு ஏற்ப மூதாட்டி ஒருவர் உற்சாக நடனம் (old woman danced) ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் பல விதமான வினோத வீடியோக்களும், புகைப்படங்களும் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களையும், கவலைகளையும் மறந்து ரசித்து சிரிக்கின்றனர். இதேபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேளதாளங்களுடனும், அலங்கார ஊர்திகளுடனும் சென்ற கோவில் திருவிழா ஊர்வலத்தை சாலையோரம் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் அதனை ரசித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த மூதாட்டி உற்சாக மிகுதியால் ஊர்வலத்தின் மேளதாளத்திற்கு ஏற்ப ஆடியுள்ளார் (old woman danced). மேலும், மேளம் அடித்து வந்த இளைஞர்களும் அந்த மூதாட்டியுடன் சேர்ந்த ஆடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், அதனை வீடியோவாக பதிவு செய்த நபர் ஒருவர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நிலையில், தற்போது அந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.