நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் (gas cylinder) விலை குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில், 19 கிலே எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.76 ஆக குறைந்துள்ளது.
முன்னதாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் (gas cylinder) விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 1ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50ஆக உயர்த்தப்பட்டது. மேலும், வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ரூ.350 அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,068.50லிருந்து ரூ.1,118.50க்கு ஆகவும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,917 லிருந்து ரூ.2,268 ஆகவும் உயர்ந்தது.
இந்நிலையில், இன்று நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில், 19 கிலே எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.91.50 குறைந்துள்ளது.
இதன் காரணமாக, 19 கிலே சிலிண்டர் ரூ.2,028க்கு விற்பனையாகிறது. சென்னையை பொறுத்த அளவில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.76 குறைந்து தற்போது ரூ.2,192க்கு விற்பனை செய்யப்படுகிறது.