சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை விளவரங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் நாட்டில் முக்கியமான காய்கறி சந்தைகளில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை முக்கியமானது. இந்த சந்தைகளில் இருந்து போரூர், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளில் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டுவரப்படும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதன் படி இன்றைய காய்கறிகளின் விலை விளவரங்கள் குறித்து பார்க்கலாம்.
விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக இஞ்சி மற்றும் சின்ன வெங்காயத்தில் விலை அதிகரித்து விற்பனையாகிறது.
சென்னை கோயம்பேட்டில் நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது
அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விலையானது தற்போது சரிவை நோக்கி செல்கிறது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் இஞ்சி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. அதன் படி இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாக்கு விபனை செய்யப்படுகிறது.