வருடக்கணக்கில் உலகை சுற்ற ஆசைப்பட்டு செய்த வேலையை விட்டு வீட்டை விற்று சுற்றுலாவுக்கு தயாரான பெண்ணுக்கு ஏற்பட்ட சோக சம்பவத்திற்கு தற்போது பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் 3 ஆண்டுகள் கப்பலில் உலகை சுற்ற ஆசைப்பட்டு வீட்டை விற்று, வேலையை உதறிவிட்டு வந்த மெரெடித் என்ற பெண் சுற்றுலாவுக்கு ஆசை ஆசையாய் தயாரான நிலையில் சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல இருந்த கப்பலின் உரிமையாளர் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மெரெடித் சுற்றுலாவுக்கு எப்படியாவது அழைத்து செல்லுங்கள் என பணிவுடன் கேட்ட நிலையில் வசூலிக்கப்பட்ட 4 கோடி பணத்தை, 3 தவணைகளாக திரும்ப தருவதாக கப்பல் நிறுவனம் அவருக்கு உறுதியளித்துள்ளது.
ஒருவேளை எனது பணம் எனக்கு திரும்பி கிடைத்துவிட்டால் துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.