இன்றைய காலத்தில் பல குழந்தைகள் முதுகுத்தண்டில் (spine) ஏற்படும் anencephaly spina bifida போன்றவற்றோடு பிறந்து வாழ்நாள் முழுவதும் அவதிப்படுகிறார்கள்.
இதற்க்கு பெண்கள் தங்களுடைய தினசரி உணவில் 400 mcg வைட்டமின் B9 இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பாதிப்பிலிருந்து குழந்தையை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒரு வாழைபழத்தில் 25 mcg, ஆரஞ்சுபழத்தில் 40 mcg, ஒரு கப் பீன்ஸில் 130 mcg, ஒரு கப் பசலை கீரையில் 250 mcg வைட்டமின் B9 இருக்கிறது. இவற்றை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் எளிமையாக 400 mcg வைட்டமின் B9 பெற முடியும்.
ஒரு ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்து விட்ட 21 வது நாளில் என்ரியோவில் நியூரல் டியூப் என்ற ஒரு குழாய் உருவாகும். இந்த குழாய்யில் இருக்கும் நியூரோ போர் என்ற துவாரங்கள் 25 வது நாளில் உருவாகி பின்னர் மூடுகிறது.
பின்னாளில், இதுதான் குழந்தையின் முதுகுத்துத்தண்டாக (spine) மாறுகிறது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வைட்டமின் B9 தான் 25 வது நாளில் உருவாகும் நியூரோ போர் துவாரங்களில் செல்களைப் பெருக்கி மூட உதவுகிறது.
ஒருவேளை ஒரு பெண்ணுக்கு வைட்டமின் B9 பற்றாக்குறை இருந்தால் அந்த துவாரங்கள் சரியாக மூடப்படாமல் முதுகுத்தண்டு வளர்ச்சி அடையாமல் குழந்தை பாதிப்புடனேயே பிறக்கிறது.
இந்த துவாரம் மூடக்கூடிய 25வது நாளை தவறவிட்டு விட்டு அதன் பிறகு வைட்டமின் B9 உணவுகளை எவ்வளவு எடுத்துக் கொண்டாலும் எந்த பலனும் கிடடைக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.