வங்கதேசத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த கோயில் கிரீடம் மயமாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு கொரோனாவுக்கு பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணத்தின்போது வங்கதேச ஜெசோரேஸ்வரி காளி கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரம்மியமான கிரீடம் ஒன்றை கோவில் நிர்வாகத்திடம் கொடுத்தார்.
இதையடுத்து அம்மனுக்கு அந்த கிரீடம் முறைப்படி அணிவிக்கப்பட்டு தினம் தோறும் பூஜைகள் செய்யப்பட்டு வந்தது இந்நிலையில் பிரதமர் கொடுத்த அந்த கிரீடம் திருடுபோய் விட்டதாகத் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
Also Read : கனமழை எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த கடிதம்..!!
தங்கம், வெள்ளியால் உருவான இந்த கிரீடம், மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த பல விஷயங்களை உள்ளடக்கி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடம் திருட்டு குறித்து கோயில் பூசாரி திலீப் முகர்ஜி மீது சந்தேகம் எழுந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
கோவிலில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களையும் ஆய்வு செய்து வரும் போலீசார் கிரீடைத்தையும் குற்றவாளியையும் விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என தெரிவித்துள்ளனர்.