உலகிலேயே மிக மோசமான பாஜக-வின் தேர்தல் பத்திர ஊழலை மக்கள் மன்றத்தில் கொண்டு (mano thangaraj) வர வேண்டும் என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது :
பாஜக-வின் தேர்தல் பத்திர ஊழலை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க நாட்டின் முன்னணி வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் வலியுறுத்தி உள்ளார்.
மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்காடிய வழக்கறிஞரும் சட்டவியல் நிபுணருமான பிரஷாந்த் பூஷன் நம் நாட்டில் ரூ. 3.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்ததங்கள் 33 நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்களை பெற்றுக்கொண்டு பாஜக வழங்கியதாக கூறியுள்ளார்.
மேலும் மத்திய புலனாய்வு பிரிவு, அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறையால் விசாரிக்கப்பட்ட 41 நிறுவனங்கள் பாஜகவிற்கு ரூ.2471 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கியுள்ளன என்கிறார்.
இது பாஜக, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் வருமான வரித்துறை ஆகியவையின் கூட்டு சதியாகும் எனவும் அவற்றை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றும் நோக்கில் வைக்கப்படும் இந்த கோரிக்கைக்கு நாம் (mano thangaraj) அனைவரும் வலு சேர்த்து, உலகிலேயே மிக மோசமான இந்த ஊழலை மக்கள் மன்றத்தில் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.