மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயரில் பிழை இருப்பது குறித்து, அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை என்றும் அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் (ramadoss) கூறியுள்ளார்.
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் (ramadoss) தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
டெல்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பின் போது பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் (http://mygov.in) தமிழ்நாட்டின் பெயர் தம “Tamilnadu” என்பதற்கு பதிலாக தவறாக “TamilNaidu” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் தானே எனக் கருதி கடந்து சென்று விட முடியாது.
அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை என்றும் அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக் கூடாது என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும் எனவும் கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக “தமிழ்நாடு” பெயர் தேவையின்றி சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தமிழநாய்டு என தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது எனவும் இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தில்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் https://t.co/tIbcd4RBwi தமிழ்நாட்டின் பெயர் TamilNaidu என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது!(1/4) pic.twitter.com/SZSjcnoTry
— Dr S RAMADOSS (@drramadoss) January 28, 2023
இந்நிலையில், மத்திய அரசின் இணையதளத்தில் தளத்தில் (http://mygov.in) நடந்த இந்த பிழைக்கு அதை நிர்வகிக்கும் தேசிய தகவலியல் மையம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து அடையாளம் கண்டு, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.