தேனி மாவட்டதில் உள்ள சோலை தேவன் பட்டியில் காலை சுமார் 7 மணியளவில் போதை ஆசாமி ஒருவர் மது போதையில் முழு நிர்வாணமாக ஊருக்குள் வலம் வந்து (walked street nude) பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்கள் அவரைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தேனி மாவட்டம் குப்பிநாயகன்பட்டி அருகே உள்ள சோலை தேவன் பட்டியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது போதையில் ஊருக்குள் நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து, அந்த நபரின் பெயர் சங்கர் என்றும் இவர் சொந்தமாக டிராக்டர் வண்டியை வைத்து தொழில் செய்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை சுமார் 7:00 மணி அளவில் மது அருந்திவிட்டு ஆடைககள களைந்து பட்ட பகலில் நிர்வாணமாக ஊருக்குள் வலம் வந்த (walked street nude) இவரை ஊர் பொதுமக்கள் பிடித்து வைத்து, வீரபாண்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், போதை ஆசாமி மது போதையில் நிர்வாணமாக ஊரில் பட்ட பகலில் வலம் வந்த சம்பவம் கிராமப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.